Vol 1 No 3 (2019): Volume 1, Issue 3, Year 2019
Articles

சீறாப்புராணத்தில் உறுதிப்பொருள்

நிர்மலாதேவி ப
முதுகலை தமிழியற்புலம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை, தமிழ்நாடு
Published July 30, 2019
Keywords
  • சீறாபுராணம்,
  • சமயம்,
  • பொருள்,
  • இன்பம்,
  • வீடுபேறு
How to Cite
பந. (2019). சீறாப்புராணத்தில் உறுதிப்பொருள். International Research Journal of Tamil (சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்), 1(3), 17-25. Retrieved from http://irjt.iorpress.org/index.php/irjt/article/view/12

Abstract

பேரிலக்கியங்கள் யாவும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களையும் கொண்டு அமைவது இன்றியமையாதது எனக் குறிப்பிடப்படுகிறது. உறுதிப்பொருள் என்பதற்கு வடமொழியில் புருஷார்த்தங்கள் என்று குறிப்பர். அறம், பொருள், இன்பம், வீடு என்பதனை, தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறுவர். தமிழ் மரபில் மோட்சம் என்பது சங்க இலக்கியத்தில் காணப்படாதவொன்று. வீடுபேறு என்பதும் வடமொழியின் தாக்கத்தினாலும் வடவர்களின் இலக்கிய ஆக்கத்தினாலும் இங்கு தோன்றியதாகும். “வடமரபின் திரிவர்க்கம் தமிழில் அறம், பொருள், இன்பம் என்று வழங்குவதோடு சதுர்வித புருஷார்த்தம் என்ற நால்வகை உறுதிப் பொருட்களில் எஞ்சிய மோட்சம் என்பது சங்க காலத்தில் வீடு எனப் பெயர்த்து வழங்கப்படவில்லை. அது சங்கம் மருவிய காலத்தில் வழங்கியது. ஏனெனில் வடமரபின் மோட்சத்துக்கு இணையான சமய வகைப்பட்ட கருத்தாக்கம் சங்க காலச் சமூகத்தில் இல்லையென்றே கூறிவிடலாம். மறுமை, துறக்கம், உயர்ந்தோர், தேவர், புத்தேள், உம்பர் உலகம் என்று புலவர் மரபு கூறியது”1 என உறுதிப் பொருட்கள் தமிழகத்தில் வழங்கப்படுவது பற்றிக் கருத்துரைக்கிறார் ராஜ்கௌதமன். இவ்வுறுதிப் பொருட்கள் காப்பியங்களில் இருப்பது இலக்கண விதியாகக் கூறப்படுகிறது. சீறாப்புராணத்தில் அறம், பொருள், இன்பம் சார்ந்த செய்திகள் காணப்படுகின்றன. மோட்சம் என்பது அனைத்து சமயங்களிலும் காணப்படும் ஒன்றாகும். பௌத்தம், சமணம் ஆகியனவற்றில் காணப்படாதது. வைதீக சமயங்களில் காணப்படுகின்றது. மேலும் சுவர்க்க லோகம் என்று இஸ்லாமியர்கள் துறக்க உலகத்தைக் குறிக்கின்றனர். சீறாப்புராணத்தில் நான்கு உறுதிப் பொருட்களும் காணப்படுகின்றன.

Downloads

Download data is not yet available.