We provide Funding for Minor Projects (Details) Application form

Apply for Project Fund

எமது சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (E-ISSN: 2582-1113) (http://irjt.iorpress.org/index.php/irjt) தற்போது பல்கலைக் கழக ஆய்வுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம். இது சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் தங்களது பங்களிப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக்குக் கொள்ளப்படுகிறார்கள்.

இன்றைய விஞ்ஞான உலகில், ஆராய்ச்சியாளர்களின் தரமானது அவர்களின் ஆராய்ச்சிகளை வெளியிடும் ஆராய்ச்சி இதழ்களின் தரத்தைக்கொண்டே அங்கீகரிக்கப்படுகிறது. இது சம்பந்தமாக ஏற்கனவே ஸ்கோபஸ் (Scopus) மற்றும் வெப் ஆஃப் சயின்ஸ் (Web of Science) ஆகிய நிறுவனங்கள் ஆய்விதழ்களின் தரத்தை மதிப்பிடும் பணிகளைச் சிறப்பாகச் செய்து வருகின்றன.

உலக மொழிகளுள் “செம்மொழி” எனும் தகுதியைப் பெற்றதும் மூத்ததும் இலக்கண இலக்கிய வளங்களைப் பெற்ற முன்னோடி மொழியாகவும் தமிழ் மொழி திகழ்ந்து வருகின்றது எனப் பேசுவது பழம் பெருமையைப்  போற்றுவதாகவே உள்ளது. இது நாள் வரையில் எந்த ஒரு தமிழ் ஆய்வு இதழும் Scopus, Web of Science ஆகிய ஆய்வு மதீப்பீட்டு நிறுவனங்களால் ஏற்கப்படவில்லை (https://www.scopus.com/source/browse.url) (https://mjl.clarivate.com/home). இது உண்மையிலேயே கவலையளிக்கும் செய்தியாகும். மொழி / இலக்கியங்கள் தவிர்த்த பிற துறைகளில் அறிவு வழிப்பட்ட ஆய்வுகள் உயர்ந்தும் மேன்மையுடனும் வளர்ந்துவரும் இக்காலப்பகுதியில் தமிழ் ஆய்வாளர்கள் இன்றும் தகுதியான ஆய்விதழ்களைக் கண்டறிவதில் தடுமாறுகின்றனர்; சிக்கல்களை எதிர்கொள்கின்றனர்.

இந்த தருணத்தில் தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்த தமிழில் தரமான சர்வதேச ஆய்விதழ்கள் தேவைப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டே எமது சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (E-ISSN: 2582 1113)(http://irjt.iorpress.org/index.php/irjt) தமிழ் ஆராய்ச்சியை சர்வதேச அளவில் வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பட்டு தற்போது பல்கலைக் கழக ஆய்வுக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

எமது இதழில் வெளியிடப்படும் கட்டுரைகளுக்கு இந்தியாவிலேயே முதல் முறையாக சர்வதேச கட்டுரை எண் (DOI Number) வழங்கப்பட்டு வெளியிடப்பட்ட கட்டுரைகள் பல அறிவியல் தரவு தளங்களில் பதிக்கப்பட்டுள்ளது (Crossref, PlumX Analytics-Elsevier, WorldCat, PKP Index, OAI-PMH - Open Archives Initiative and ROAD). மேலும் ஸ்கோபஸ் (Scopus) மற்றும் வெப் ஆஃப் சயின்ஸ் (Web of Science) போன்றவைகளில் சேர்க்க தேவையான நடவடிக்கைகள் மேட்கொள்ளப் பட்டு வருகிறது. இதன் தொடர்ச்சியாக தமிழ் ஆய்வுகளை ஊக்குவிக்கும் பொருட்டு சிறிய நிதி உதவியினை எமது சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் மூலமாக வழங்க உள்ளோம் (அதிகபட்சம் 20,000 (இந்திய ரூபாய் மதிப்பில்)). எனவே இந்த வாய்ப்பினை ஆராய்ச்சியாளர்கள் பயன் படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.இத்துடன் விண்ணப்பத்தை இணைத்துள்ளோம்.


Download Application form