International Research Journal of Tamil (சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்) http://irjt.iorpress.org/index.php/irjt International Research Journal of Tamil its a Quarterly open access journal At this moment, there is a need for quality international research in Tamil to promote Tamil research, We have arranged for the free publication of quality articles to be accepted in our Journal. IOR PRESS en-US International Research Journal of Tamil (சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்) 2582-1113 பாகீரதியின் மதியம் நாவலில் அரசியல் பதிவுகள் http://irjt.iorpress.org/index.php/irjt/article/view/10
பாகீரதி மதியம் நாவல் பல்வேறு அரசியல் குறித்த செய்தகிளைத்தருகிறது. 1970களில் நடைபெறுகின்ற கதையில் அன்றைய சூழலின் மத்திய மாநில அரசுகளின் செயல்பாடுகள் குறித்த குறிப்புகள் காணப்படுகின்றன.
தனலெட்சுமி மு Copyright (c) 2019 IOR PRESS http://creativecommons.org/licenses/by/4.0 2019-07-30 2019-07-30 1 3 1 7 பத்துப்பாட்டில் வானில் இயக்கமும் தமிழர் சிந்தனையும் http://irjt.iorpress.org/index.php/irjt/article/view/11
ஆகாயத்தில் சூரியன் முதலான கோள்கள் வருவதையும் மறைவதையும் காணமுடிகிறது. அவை தோன்றி மறையும் விதம் பற்றிய பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்கள் தமிழர்கள் ஞாயிறு மட்டுமின்றி பல்வேறு கோள்களும் விண்மீன்களும் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வருவதை கணித்திருந்தனர். அக்காலத்தில் வானை அளந்து கூறும் அளவிற்கான கணிதர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் வழி அறிந்துகொள்ள முடிகிறது. “செஞ்ஞாயிற்றினது விதியும் அஞ்ஞாயிற்றினது இயக்கமும் அவ்வியக்கத்தால் சூழப்பட்ட பார்வட்டமும் காற்றியங்கும் திக்கும் ஓராதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்தறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையனவென்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்” 8 என்று (புறம்.30) புறப்பாடலிற்கு விளக்கமளிக்கின்றார் சுப்புரெட்டியார். இவ்வாறு அக்காலத்து வாழ்ந்த தமிழர்கள் வானை அளந்தறியக் கூடியவர்கள் மட்டுமின்றி ஞாயிற்றின் இயக்கத்தையும், ஓரைகளின் இயக்கத்தையும் அறிந்தவர்களாக இருந்தார்கள் என்பது தொpகிறது. அதனால்தான் வானில் தோன்றும் திங்கள் பற்றியும் விண்மீன்கள் பற்றியும், சூரியனின் இயக்கம் பற்றியும் பாடல்கள் குறிப்பிடுகின்றன எனலாம்.
முத்துலட்சுமி ஆ Copyright (c) 2019 IOR PRESS http://creativecommons.org/licenses/by/4.0 2019-07-30 2019-07-30 1 3 8 16 சீறாப்புராணத்தில் உறுதிப்பொருள் http://irjt.iorpress.org/index.php/irjt/article/view/12
பேரிலக்கியங்கள் யாவும் அறம், பொருள், இன்பம், வீடுபேறு என்னும் நான்கு உறுதிப்பொருள்களையும் கொண்டு அமைவது இன்றியமையாதது எனக் குறிப்பிடப்படுகிறது. உறுதிப்பொருள் என்பதற்கு வடமொழியில் புருஷார்த்தங்கள் என்று குறிப்பர். அறம், பொருள், இன்பம், வீடு என்பதனை, தர்மம், அர்த்தம், காமம், மோட்சம் என்று கூறுவர். தமிழ் மரபில் மோட்சம் என்பது சங்க இலக்கியத்தில் காணப்படாதவொன்று. வீடுபேறு என்பதும் வடமொழியின் தாக்கத்தினாலும் வடவர்களின் இலக்கிய ஆக்கத்தினாலும் இங்கு தோன்றியதாகும். “வடமரபின் திரிவர்க்கம் தமிழில் அறம், பொருள், இன்பம் என்று வழங்குவதோடு சதுர்வித புருஷார்த்தம் என்ற நால்வகை உறுதிப் பொருட்களில் எஞ்சிய மோட்சம் என்பது சங்க காலத்தில் வீடு எனப் பெயர்த்து வழங்கப்படவில்லை. அது சங்கம் மருவிய காலத்தில் வழங்கியது. ஏனெனில் வடமரபின் மோட்சத்துக்கு இணையான சமய வகைப்பட்ட கருத்தாக்கம் சங்க காலச் சமூகத்தில் இல்லையென்றே கூறிவிடலாம். மறுமை, துறக்கம், உயர்ந்தோர், தேவர், புத்தேள், உம்பர் உலகம் என்று புலவர் மரபு கூறியது”1 என உறுதிப் பொருட்கள் தமிழகத்தில் வழங்கப்படுவது பற்றிக் கருத்துரைக்கிறார் ராஜ்கௌதமன். இவ்வுறுதிப் பொருட்கள் காப்பியங்களில் இருப்பது இலக்கண விதியாகக் கூறப்படுகிறது. சீறாப்புராணத்தில் அறம், பொருள், இன்பம் சார்ந்த செய்திகள் காணப்படுகின்றன. மோட்சம் என்பது அனைத்து சமயங்களிலும் காணப்படும் ஒன்றாகும். பௌத்தம், சமணம் ஆகியனவற்றில் காணப்படாதது. வைதீக சமயங்களில் காணப்படுகின்றது. மேலும் சுவர்க்க லோகம் என்று இஸ்லாமியர்கள் துறக்க உலகத்தைக் குறிக்கின்றனர். சீறாப்புராணத்தில் நான்கு உறுதிப் பொருட்களும் காணப்படுகின்றன.
நிர்மலாதேவி ப Copyright (c) 2019 IOR PRESS http://creativecommons.org/licenses/by/4.0 2019-07-30 2019-07-30 1 3 17 25 சங்க இலக்கியத்தில் வாழ்க்கை வட்டச் சடங்குகள் http://irjt.iorpress.org/index.php/irjt/article/view/13
மனித வாழ்க்கையில் ஏற்படும் பிறப்பு, இறப்பு போன்றவற்றிற்குச் செய்யப்படும் சடங்குகள் வாழ்க்கை வட்டச் சடங்குகள் எனக் கூறப்படுகின்றன. வாழ்வில் கடைபிடித்தொழுகும் பல்வேறு ஒழுக்க வடிவங்களில் சடங்குகளும் அமைகின்றன. இறந்தோர்க்குத் திதி செய்தலும், இறந்தோரின் ஆவி வீடுபேறு எய்தவும் சடங்குகள் செய்வதைக் காணமுடிகிறது. வாழ்க்கை வட்ட வளமைச் சடங்குகளாக பூப்பெய்துதல் குறிப்பிடப்படுகிறது. ஒரு பெண் கருவுயிர்க்கும் நிலைக்குத் தயாராவதை பூப்பெய்துதல் எனக் குறிப்பிடுகின்றனர். அச்சமயங்களில் செய்யப்படும் சடங்குகள் பூப்புச் சடங்குகள் எனப்படுகின்றன. இச்சடங்கு வளமைச் சடங்காகவும் கொள்ளப்படுகிறது. “சடங்குகள் எல்லாம் அந்தந்தப் பண்பாட்டுச் சமூகங்களுக்குப் பொது என்றாலும், ஆணுக்குரியவையும், பெண்ணுக்குரியவையும் வேறுபடுகின்றன. குறிப்பாக சங்க இலக்கியத்தில் இந்த வேறுபாட்டை இனங் காணவியலும், ஆணுக்கு, ஆள்பவனுக்கு உரிய சடங்குகள் பெரிதும் அன்று அவனது சமூக ஆள்வினைகளான போர், வேளாண்மை, அரசாட்சி ஆகியவற்றைச் சார்ந்தும் பெண்ணுக்கு மனையுறை மகளிர்க்கு உரிய சடங்குகள் அவர்களது பாலியல் உடல் சார்ந்தும் அவ்வுடல் வதுவை, மகப்பேறு, கைம்மை ஆகிய இனவிருத்தி அல்லது இனவிருத்தித் தடை சார்ந்தும் காணப்படுகின்றன”1 என்று குறிப்பிடுகிறார் ராஜ்கௌதமன். ஆணுக்காக நிகழ்த்தப்படும் சடங்குகள் சமூகப் பெறுமதியையும், பெண்ணுக்காக நிகழ்த்தப்படும் சடங்குகள் உடைமையைச் சார்ந்தும் அமைவதைக் காணமுடிகிறது. பெரும்பாலும் வாழ்க்கை வட்டச் சடங்குகள் பெண்ணின் இனவிருத்தி சார்ந்தனவாக நிகழ்கின்றன.
சாந்தி கோ Copyright (c) 2019 IOR PRESS http://creativecommons.org/licenses/by/4.0 2019-07-30 2019-07-30 1 3 26 32 அற இலக்கியங்களில் பொருளாதாரச் சிந்தனைகள் http://irjt.iorpress.org/index.php/irjt/article/view/14
வாழ்க்கையை நடத்துவதற்கும் அரசை நடத்துவதற்கும் இன்றியமையாததாக விளங்குவது பொருளாகும். பொருளை அடிப்படையாகக் கொண்டே ஒவ்வொரு தனிமனிதரின் மேம்பாட்டிலிருந்து நாட்டின் மேம்பாடு வரை சார்ந்திருக்கிறது. அதனால்தான் ஔவையார் ‘குடியுயரக் கோனுயரும்’ என்றுரைத்தார். பொருள் செயல்வகை அதிகாரத்தில் திருக்குறளானது பொருளை அறத்தின் அடிப்படையில் சேர்க்கும் வழிமுறைகளைக் கூறுகிறது. பிற அற இலக்கியங்களும் பொருள் சேர்த்தலை இதே போன்ற கருத்தைக் கொண்டிருக்கின்றன. பொருள் சேர்த்தலில் மனிதர்க்கு இரண்டு நிலைகளில்தான் அறமற்று செயல்படுகின்றனர் ஒன்று வறுமை. பிறிதொன்று பொருள்சேர்க்கும் ஆசை. வறுமை என்பது பொருளாதார ஏற்றத் தாழ்வின் காரணிகளில் ஒன்றாகும். “மனிதனைத் தவறான முறையில் பொருள் ஈட்ட ஊக்குவிப்பது இருநிலைப்படும். ஒன்று வறுமை. மற்றது நிறைவேறாத ஆசைப் பெருக்கு. இவ்விரண்டில் ஏதேனும் ஒன்று நிறைவுபெறும் பொருட்டு முறைகேடான அறம் சாராத செயலில் பொருள் ஈட்ட முனைகின்றான்”1 என்று குறிப்பிடும் இக்கூற்றானது. சமூகத்தில் இருநிலைப்பட்ட மனிதர்கள் இருப்பதையும் செல்வ வளம் மிக்கவர்களும் முறைகேடான வழியில் பொருள் ஈட்ட முனைவர் என்பதை வெளிப்படுத்துவதாக அமைகிறது. ஏழைகள் தம் நிலை காரணமாக முறையற்ற பொருளீட்டலில் ஈடுபடுவர் என்று குறிப்பிடுவதில் திருடுதல் போன்ற செயல்களே முன்னிற்கின்றன.
சிவகாமி ச Copyright (c) 2019 IOR PRESS http://creativecommons.org/licenses/by/4.0 2019-07-30 2019-07-30 1 3 33 39