Vol 1 No 3 (2019): Volume 1, Issue 3, Year 2019
Articles

பத்துப்பாட்டில் வானில் இயக்கமும் தமிழர் சிந்தனையும்

முத்துலட்சுமி ஆ
அருள் ஆனந்தர் கல்லூரி, கருமாத்தூர், தமிழ்நாடு
Published July 30, 2019
Keywords
  • பத்துபாட்டு,
  • தமிழர்,
  • வானியல்,
  • சூரியன்,
  • சந்திரன்,
  • ஞாயிறு,
  • திங்கள்
  • ...More
    Less
How to Cite
ஆம. (2019). பத்துப்பாட்டில் வானில் இயக்கமும் தமிழர் சிந்தனையும். International Research Journal of Tamil (சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்), 1(3), 8-16. Retrieved from http://irjt.iorpress.org/index.php/irjt/article/view/11

Abstract

ஆகாயத்தில் சூரியன் முதலான கோள்கள் வருவதையும் மறைவதையும் காணமுடிகிறது. அவை தோன்றி மறையும் விதம் பற்றிய பல்வேறு சிந்தனைகளைக் கொண்டவர்கள் தமிழர்கள் ஞாயிறு மட்டுமின்றி பல்வேறு கோள்களும் விண்மீன்களும் குறிப்பிட்ட சுற்றுப்பாதையில் சுற்றி வருவதை கணித்திருந்தனர். அக்காலத்தில் வானை அளந்து கூறும் அளவிற்கான கணிதர்கள் வாழ்ந்திருந்தனர் என்பதை சங்கப் பாடல்கள் வழி அறிந்துகொள்ள முடிகிறது. “செஞ்ஞாயிற்றினது விதியும் அஞ்ஞாயிற்றினது இயக்கமும் அவ்வியக்கத்தால் சூழப்பட்ட பார்வட்டமும் காற்றியங்கும் திக்கும் ஓராதாரமுமின்றித் தானே நிற்கின்ற ஆகாயமும் என்று சொல்லப்பட்ட இவற்றை ஆண்டாண்டு போய் அளந்தறிந்தவர்களைப் போல நாளும் இத்துணையளவை உடையனவென்று சொல்லும் கல்வியை உடையோரும் உளர்” 8 என்று (புறம்.30) புறப்பாடலிற்கு விளக்கமளிக்கின்றார் சுப்புரெட்டியார். இவ்வாறு அக்காலத்து வாழ்ந்த தமிழர்கள் வானை அளந்தறியக் கூடியவர்கள் மட்டுமின்றி ஞாயிற்றின் இயக்கத்தையும், ஓரைகளின் இயக்கத்தையும் அறிந்தவர்களாக இருந்தார்கள் என்பது தொpகிறது. அதனால்தான் வானில் தோன்றும் திங்கள் பற்றியும் விண்மீன்கள் பற்றியும், சூரியனின் இயக்கம் பற்றியும் பாடல்கள் குறிப்பிடுகின்றன எனலாம்.

Downloads

Download data is not yet available.