About the Journal

இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள தமிழ் மொழி உலகிலேயே மிகவும் பழமை வாய்ந்த, மொழியாகும். உலக மொழிகளுள் மூத்ததும் முன்னோடியுமான மொழிகளில் தமிழ் மொழியும் ஒன்று என்றால் அது மிகையாகாது.

தமிழ் மொழி தொன்மை, முன்மை, எளிமை, ஒண்மை, இளமை, வளமை, தாய்மை, தூய்மை, செம்மை, மும்மை, இனிமை, தனிமை, பெருமை, திருமை, இயன்மை, வியன்மை என பலவகை சிறப்புகளை ஒருங்கேயுடையது என்கிறார் ஞா.தேவநேயப் பாவாணர்.

தேமதுரத் தமிழோசை உலகெங்கும் ஒலிக்க வேண்டும் என்ற மகாகவி பாரதியின் கனவை நனவாக்கும் வகையில் தற்போது உள்நாட்டிலும் மற்றும் வௌிநாட்டிலும் பல பல்கலைக்கழகங்களில் தமிழ் இருக்கை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த தருணத்தில் தமிழ் ஆராய்ச்சியை மேம்படுத்தத் தமிழில் தரமான சர்வதேசஆய்விதழ்கள் தேவைப்படுகின்றன. இதை கருத்தில் கொண்டு சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் (E-ISSN: 2582-1113) தொடங்கப்பட்டுள்ளது.

எமது ஆய்விதழில் ஏற்றுக்கொள்ளப்படும் தரமான கட்டுரைகள் அனைவருக்கும் இலவசமாக கிடைக்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இது சம்பந்தமாக ஆராய்ச்சியாளர்கள் தங்களது பங்களிப்பினை நல்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

 

Tamil is the oldest language in the world, with a literary heritage dating back over two thousand five hundred years. It is no exaggeration if Tamil is one of the oldest and foremost languages in the world.
G. Devaneya Paavaanar says that the Tamil language has a variety of specialities such as anthropomorphism, simplicity, lightness, youthfulness, prosperity, motherhood, purity, richness, tranquillity, sweetness, loneliness, glory, purity and virtue.
At this moment, there is a need for quality international research in Tamil to promote Tamil research. Considering this, the International Research Journal of Tamil (E-ISSN: 2582-1113) has been launched.
Researchers are kindly asked to make their contribution in this regard.