Call for Minor Project Proposals - 2022

குறுகிய கால ஆய்வுத்திட்டப் பணிகளுக்கான நிதி நல்கை அறிவிப்பு - சர்வதேசத் தமிழ் ஆய்விதழ்

அனைவருக்கும் வணக்கம்!

சர்வதேசத் தமிழ் ஆய்விதழானது (E-ISSN: 2582-1113) கடந்த 2019 ம் ஆண்டு முதல் தமிழ் ஆராய்ச்சியை சர்வதேச அளவில் வளர்க்கும் நோக்கில் தொடங்கப்பெற்று சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் பல்கலைக் கழக மானியக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ள இதழாகவும் உள்ளது. கடந்த கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் தமிழ் ஆய்வாளர்களின் ஆய்வுத்திறன் மேம்பாட்டுக்காக நூற்றுக்கும் அதிகமான இணைய வழி நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கங்களை தொடர்ந்து ஒருங்கிணைத்து நடத்தியுள்ளது.

கடந்த 2020-ம் ஆண்டு தமிழ் ஆய்வுகளை ஊக்குவிக்கும் பொருட்டு குறுகிய கால ஆய்வுத்திட்டங்களுக்குப் பயன்படும் வகையில் நிதி உதவியினை எமது சர்வதேசத் தமிழ் ஆய்விதழ் மூலமாக வழங்கி இருந்தோம். இதன் தொடர்பாக மீண்டும் 2022-ம் ஆண்டுக்கான நிதி உதவியினை வழங்கவிருக்கிறோம் ((அதிகட்சம் 20௦௦௦.௦௦ (இந்திய ருபாய் மதிப்பில்)). எனவே இதனைப் பெறுவதற்குத் தகுதிவாய்ந்த ஆய்வாளர்களிடமிருந்து விண்ணப்பங்களை வரவேற்கிறோம். இந்த வாய்ப்பினை ஆராச்சியாளர்கள் பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

 

· விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள்: 25th April 2022

· முடிவுகள் வெளியிடப்படும் நாள்: 30th April 2022

· விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: funding@irjt.iorpress.org

· தொடர்புக்கு: +9197917 48838

 

 


Download Application form